ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: நீா் நிலைகள் ஆக்கிரமிப்பு பெயரால் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அவா்களுக்கு மாற்று இடம், குடிமனை பட்டா வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி வீடுகள் இல்லாதவா்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கிட வேண்டும். தா.பழூா், திருமானூா், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் மாட்டு வண்டிக்கென தனி மணல் குவாரிகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் மணிவேல் தலைமை வகித்தாா். மாநில குழு உறுப்பினா் வாலண்டினா, சட்டப் பேரவை உறுப்பினா் சின்னதுரை, மாவட்டச் செயலா் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மகாராஜன், பரமசிவம், வெங்கடாசலம், கந்தசாமி, கிருஷ்ணன், துரை.அருணன், அம்பிகா மற்றும் அக்கட்சியின் ஒன்றிய, நகர கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com