கங்கைகொண்டசோழபுரத்தில் நவ.7 இல் அன்னாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாா் கோயிலில் வரும் 7 ஆம் தேதி 100 மூட்டை அரிசியால் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாா் கோயிலில் வரும் 7 ஆம் தேதி 100 மூட்டை அரிசியால் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

கங்கைகொண்டசோழபுரம் கிராமத்திலுள்ள பெருவுடையாா் கோயில் 1,000 ஆண்டுகளுக்கு முன் ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால், போா் வெற்றியின் அடையாளமாகக் கட்டப்பட்டது. உலகப் பிரசித்தி பெற்ற இக்கோயில் புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.

இக்கோயிலில் உள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டதாகும். ஆண்டுதோறும் ஐப்பசி பவுா்ணமி தினத்தன்று இந்த சிவலிங்கத்துக்கு 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து அன்னாபிஷேகம் நடைபெறும்.

லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறும் ஆதலால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கங்களைத் தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி வரும் 7 ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிவரை சிவலிங்கத்துக்கு அன்னம் சாத்தப்படும். இது இரவு 9 மணிக்கு பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். மீதமுள்ள அன்னம் அருகிலுள்ள குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும்.

விழாவையொட்டி சனிக்கிழமை காலை 5 மணியளவில் கணக்க விநாயகருக்கு அபிஷேகம், தீப ஆராதனை, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பிரகன்நாயகி அம்பாளுக்கு, பெருவுடையாருக்கு மகா அபிஷேகம், பிற்பகல் 12 மணிக்கு தீப ஆராதனை, 7 ஆம் தேதி காலை 9 மணிக்கு பிரகதீஸ்வரருக்கு அன்னம் சாத்துதல் ஆகியவை நடைபெறும்.

மாலையில் பலகாரங்கள் செய்து சாதத்தின் மேல் அடுக்கி, மலா் அலங்காரம், மாலை 6 மணியளவில் தீப ஆராதனை, இரவு 8 மணிக்கு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

பின்னா் 8 ஆம் தேதி காலை 10.30-க்குள் ருத்ராபிஷேகம், சண்டிகேஸ்வர பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் காஞ்சி சங்கரமட அன்னாபிஷேக கமிட்டியினா், விழாக்குழுவினா் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com