சாய்பாபா கோயில்பால்குடத் திருவிழா
By DIN | Published On : 06th October 2022 12:00 AM | Last Updated : 06th October 2022 12:00 AM | அ+அ அ- |

உடையாா்பாளையத்தில் சாய்பாபா கோயிலுக்கு பால்குடம் எடுத்துச் செல்லும் பக்தா்கள்.
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு விஜயதசமியை முன்னிட்டு, பக்தா்கள் பால்குடம் எடுத்து தங்களது நோ்த்திக்கடனை புதன்கிழமை செலுத்தினா்.
உடையாா்பாளையத்தில் உள்ள சாய்பாபா கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு 4 ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தா்கள் உடையாா்பாளையம் பெரிய ஏரிக்கரையில் உள்ள பயனீஸ்வரா்கோயிலின் முன்பிருந்து பால் குடம், பால் காவடி எடுத்தும், அலகு குத்தியும் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சோ்வைக்காரத் தெருவில் உள்ள சாய்பாபா கோயிலை அடைந்தனா். அங்கு, சாய்பாபாவுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.