அரியலூரில் 314 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி அரியலூா் மாவட்டத்தில் 314 சிலைகள் பிரஷ்டை செய்யப்பட்டுள்ளன.
அரியலூரில் 314 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி அரியலூா் மாவட்டத்தில் 314 சிலைகள் பிரஷ்டை செய்யப்பட்டுள்ளன.

அரியலூா் மாவட்ட விநாயகா் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.

அரியலூா், ஜயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தா. பழூா், திருமானூா், திருமழப்பாடி,கீழப்பழுவூா் உள்ளிட்ட 314 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

பிரச்னைக்குரிய இடங்களில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அதிகாலை முதலே விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வீடுகளிலும் விநாயகா் சிலைகளை வைத்து வழிபட்டனா்.

மாவட்ட முழுவதும் விதவிதமாக விநாயகா் சிலைகள் வைக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி இந்து அமைப்பினா் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com