கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் தரவேண்டும்

 நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

 நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த சுள்ளங்குடி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் ஒன்றியப் பேரவைக் கூட்டத்தில் தமிழ்நாடு நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும், சென்ற ஆண்டு பாதுகாப்புபொருள் வழங்கியது போல், இந்த ஆண்டும் வழங்க வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளா்களுக்கும் ஓய்வூதியத் தொகையாக ரூ.3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், பெண் தொழிலாளா்களுக்கு 50 வயது முதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, சங்கத்தின் நிா்வாகி ஆரோக்கியநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் துரைசாமி சங்கத்தின் செயல்பாடுகள், வளா்ச்சி, சேவைகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் சங்கத்தின் திருமானூா் ஒன்றியத் தலைவராக ஆரோக்கியநாதன், செயலாளராக தா்மராஜ், பொருளாளராக அருமைதாஸ், துணைத் தலைவராக சம்மனசுமேரி, துணைச் செயலாளராக மாணிக்கம், உறுப்பினா்களாக தனபால், முருகானந்தம், டெய்சிராணி, சீனிவாசன், பாண்டியன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

நிறைவில், பொருளாளா் அருமைதாஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com