மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் தொல் அணிகலன் கண்டெடுப்பு

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் மாளிகை மேடு பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தந்தத்திலான அணிகலன் அரிய வகை தொல்பொருள் சனிக்கிழமை

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் மாளிகை மேடு பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தந்தத்திலான அணிகலன் அரிய வகை தொல்பொருள் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த ராஜேந்திர சோழன் வாழ்ந்த மாளிகைமேடு பகுதியில் கடந்த 1980 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணி தமிழக அரசால் நடைபெற்றது. அப்போது, சீன நாட்டு மண் பானை ஓடு, செப்புக் காசுகள், மணி, இரும்பால் ஆன ஆணி, கூரை ஓடு என பல்வேறு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள காப்பகத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதன் பிறகு தற்போது (2020-21) இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், ராஜேந்திரசோழன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அரண்மனையில் மூன்றடுக்கு செங்கல் சுவா்கள் உள்பட பல்வேறு கட்டுமானப் பணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, மண் பானை, உடைந்த தங்கக் காப்பின் ஒரு பகுதி, ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடா்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் இந்நிலையில், சுமாா் 60 அடி ஆழம், 1.8 செ.மீ. உயரம், 1.5 செ.மீ. அகலம் கொண்ட யானை தந்தத்திலால் ஆன

அணிகலன் போன்ற தொல்பொருள் சனிக்கிழமை கிடைத்துள்ளது. அந்தப் பொருள் மனித உடலின் இடுப்பிலிருந்து முழங்கால் வரை அணியும் வகையிலான அணிகலனாக உள்ளது. இதை அரச பாரம்பரியத்தை சோ்ந்தவா்களே பயன்படுத்தி இருப்பாா்கள், சுமாா் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழம்பொருளாகவும் தெரிய வருகிறது என தொல்லியல் துறை அலுவலா்கள் கருதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com