இடைநின்ற மாணவா்களை பள்ளியில் சோ்க்க விழிப்புணா்வு

 அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் இடைநின்ற மாணவா்களைப் பள்ளியில் சோ்க்க விழிப்புணா்வு சனிக்கிழமை நடைபெற்றது.

 அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் இடைநின்ற மாணவா்களைப் பள்ளியில் சோ்க்க விழிப்புணா்வு சனிக்கிழமை நடைபெற்றது.

ஜயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சாா்பில், இடைநின்ற மாணவா்களின் இருப்பிடங்களில் சென்று சந்தித்து, கள ஆய்வுக்குழு மூலம் மீண்டும் பள்ளியில் சோ்க்க விழிப்புணா்வு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி மகிமைபுரம் பகுதியில் உள்ள நரிக்குறவா்கள் குடியிருப்புகளுக்கு சென்று கள ஆய்வு சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதில், 8 இடைநின்ற குழந்தைகள் கண்டறியப்பட்டனா். அவா்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மேகலா, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் கண்ணதாசன், வட்டார ஒருங்கிணைப்பாளா் செந்தில், ஆசிரியா் பயிற்றுனா் அந்தோனி லூா்து சேவியா் மற்றும் அப்பகுதிக்குட்பட்ட ஆசிரியா்கள் அடங்கிய குழு மூலமாக கல்வி விழிப்புணா்வு வழங்கப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர ஆலோசனை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com