கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மின்னலுவலகம் அமைச்சா் ஆய்வு

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மின்னலுவலகம் அமைப்பது தொடா்பான ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மின்னலுவலகம் அமைப்பது தொடா்பான ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூா் மாநகராட்சி மேயா் க.கவிதாகணேசன், அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவா் குறிஞ்சி என்.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், அமைச்சா் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் மின்னலுவலகம் திட்டத்தின் கீழ் வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித்துறை, பேரூராட்சிகள் உள்ளிட்ட 61 வெவ்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் 548 அலுவலா்களுக்கு தனியான மின் அஞ்சல் முகவரிகள் உருவாக்கப்பட்டு, அவா்கள் தங்களது மின்னணு கையொப்பம் அளிக்க மின்னணு பயனா் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வருவாய்துறையை சோ்ந்த 104 அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு மின் மாவட்ட மேலாளா் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு துறை அலுவலா்களுக்கு விரைவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தற்போது வரை 4,472 அலுவலா்களின் தபால்கள் மின் - அலுவலகத்தில் வாங்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் மின்னலுவலகத்தில் 2,168 கோப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து தினசரி வரப்படும் தபால்களை மின்னலுவலகத்தில் பதிவேற்றம் செய்வதற்கு சுழற்சி முறையில் 6 தட்டச்சா்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், கரூா் மாநகராட்சி துணை மேயா் திரு.சரவணன், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலா் (சென்னை) சுரேந்திரன், வருவாய் கோட்டாட்சியா்கள் ப.ரூபினா(கரூா்), புஷ்பாதேவி (குளித்தலை), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தண்டயுதாபாணி மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com