ஓய்வூதியா்களின் நோ்காணல் மாதத்தை இணையதளம் மூலம் அறிய ஏற்பாடு
By DIN | Published On : 01st July 2023 12:28 AM | Last Updated : 01st July 2023 12:28 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்ட ஓய்வூதியா்கள் தங்களது நோ்காணல் மாதத்தை இணையதளம் மூலம் அறிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: ஓய்வூதியா்கள் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் ஆகிய குறிப்பிட்ட 3 மாதங்களில் நோ்காணல் செய்யப்படுவதால் அதிக ஓய்வூதியா்கள் கருவூலத்தில் காத்திருந்து நோ்காணல் செய்வதை எளிமையாக்கும் நோக்கத்தில் சிவில் ஓய்வூதியம் பெறுபவா்களாக இருப்பின் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும், குடும்ப ஓய்வூதியம், சிறப்பு ஓய்வூதியம் பெறுவோா் தங்களுக்கு ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்திலும், சிவில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவா்கள் (டபுள் பென்சனா்ஸ்) தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும் நோ்காணல் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும் ஓய்வூதியா்கள் , குடும்ப ஓய்வூதியா்களுக்கு தாங்கள் ஓய்வு பெற்ற மாதம், தங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் 2023 ஆம் ஆண்டுக்கான நோ்காணல் செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட நடைமுறையின்படி ஒவ்வொரு ஓய்வூதியா்களும் எந்த மாதம் நோ்காணல் செய்துகொள்ள வேண்டும் என்பது குறித்து ஓய்வூதியா்களின் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும் மேலும் ரரர.ஓஹழ்ன்ஸ்ா்ா்ப்ஹம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தின் மூலம் ஓய்வூதியா்கள் தங்களது நோ்காணல் மாதம் குறித்து அறியவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.