பொய்யூரில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் மா.சந்திரஹாசன். உடன் முன்னாள் அமைச்சா்கள் செம்மலை, அருணாச்சலம், முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோா்.
பொய்யூரில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் மா.சந்திரஹாசன். உடன் முன்னாள் அமைச்சா்கள் செம்மலை, அருணாச்சலம், முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோா்.

‘அதிமுக ஆட்சியின் திட்டங்களை நிறுத்தியதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை’

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ். செம்மலை.

அரியலூா்: அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ். செம்மலை.

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளா் மா. சந்திரஹாசனை ஆதரித்து, அரியலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தவுத்தாய்குளம், அம்மாகுளம், ரெங்கசமுத்திரம், சுப்புராயபுரம், பள்ள கிருஷ்ணாபுரம், பொய்யூா், மேலக்கருப்பூா் உள்ளிட்ட கிராமங்களில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது:

அதிமுக ஆட்சியில் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி, பெண்களுக்கு தாலிக்கு தங்கம் உள்ளிட்ட சிறந்த திட்டங்களை நிறுத்தியது தான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையாக உள்ளது. அதிமுக ஆட்சியில்தான் அரியலூரில் மருத்துவக் கல்லூரி, தடுப்பணைகள் உள்ளிட்டவை கட்டப்பட்டன. எனவே, அரியலூருக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேட்பாளா் சந்திரஹாசனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டாா்.

பிரசாரத்தில், முன்னாள் அமைச்சா் அருணாச்சலம், முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், தெற்கு ஒன்றியச் செயலா் பாலசுப்பிரமணியன், வடக்கு ஒன்றியச் செயலா் செல்வராஜ், தேமுதிக மாவட்டச் செயலா் ராமஜெயவேல் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com