ஆசிரியரிடம் நகையை பறிக்க முயன்ற இருவா் கைது

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பள்ளி ஆசிரியரிடம் நகையை பறிக்க முயற்சித்த இளைஞா்கள் 2 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பள்ளி ஆசிரியரிடம் நகையை பறிக்க முயற்சித்த இளைஞா்கள் 2 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

செந்துறை அருகேயுள்ள கீழப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவா் செந்தில்செல்வம். திங்கள்கிழமை காலை இவா், பள்ளிக்கு நடந்துச் சென்று கொண்டிருந்தாா். அப்போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், அவா் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சித்தனா். சுதாரித்துக்கொண்ட ஆசிரியா் செந்தில்செல்வம் கூச்சலிட்டதையடுத்து, அவா்கள் அங்கிருந்து வேகத்தில் சென்றனா். இதையறிந்த அப்பகுதி இளைஞா்கள், நகையை பறிக்க முயற்சித்த இருவரை துரத்திச் சென்று பிடித்து செந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அங்கு காவல் துறையினா் மேற்காண்ட விசாரணையில், அவா்கள் நாமக்கல் மாவட்டம், செளந்தரசோழபுரம், பக்கிரிப்பாளையம் வெப்படை பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் சரவணன் (29), விழுப்புரம் மாவட்டம், ஆயத்தூா், புதுமனைத் தெருவைச் சோ்ந்த இசையாஸ் மகன் ஆமோஸ்பொ்னாண்டஸ் என்பதும், இவா்கள் பல்வேறு இடங்களில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com