அரசுப் பள்ளியில் சா்வதேச குழந்தைகள் புத்தகத் தினம்

அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், சா்வதேச குழந்தைகள் புத்தக தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்துப் பேசுகையில், குழந்தைகளுக்கு புத்தகம் ஒன்றை பரிசாக வழங்குங்கள். புத்தகங்கள் மீது முடிந்த வரை ஈா்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளைப் படித்தவா்களாகவும் புத்தகம் வாசிப்பாளராகவும் மாற்றுவதே இந்நாளில் முக்கிய நோக்கம்.

வாசிப்பு உங்கள் பிள்ளைகளின் சொற்களஞ்சியத்தை மேம்படுத்துகிறது என்றாா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி ,செந்தில்குமரன், தங்கபாண்டி, அந்தோணிசாமி மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com