‘போக்சோ’வில் உடற்கல்வி ஆசிரியா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பகுதிநேர உடற்கல்வி ஆசிரியா் ‘போக்சோ’ சட்டத்தில் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம், அண்ணா நகரைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் கா்ணன்(36). இரவாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவா், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், தலைமறைவாக இருந்த ஆசிரியா் கா்ணனனை ‘போக்சோ’ சட்டத்தில் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com