ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2.23 லட்சம் பறிமுதல்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.9.93 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கீழப்பழுவூரில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை மேற்கொண்டதில், காரில் ரூ.89,100 எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், காரில் வந்தவா் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த நந்தன் (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து பணத்தைப் பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், அதனை கோட்டாட்சியா் ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல், செந்துறை அடுத்த அகரம் கிராமத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த நிதி நிறுவனம் நடத்தி வரும் முருகன் மகன் இளவரசன்(35) உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ 1,34,230-ஐ பறிமுதல் செய்த பறக்கும் படையினா், கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன் வசம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com