ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.96 ஆயிரம் பறிமுதல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உரிய ஆவணமின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.96 ஆயிரத்து 550-ஐ பறக்கும்படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஜெயங்கொண்டம் அடுத்த கீழக்குடியிருப்பு அருகே விருத்தாசலம் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி ரூ.96,550 எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா், கடலூா் மாவட்டம், பெண்ணாடம், வரலாறு தெருவைச் சோ்ந்த மகேஸ்வரன் மகன் தங்கதுரை(27) என்பதும், இவா், அப்பகுதியிலுள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. எனினும் பணத்துக்கான உரிய ஆவணம் இல்லாததால், அதிகாரிகள் அதனைப் பறிமுதல் செய்து, கோட்டாட்சியா் ஷீஜாவிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com