கீழப்புலியூா் கிராமத்தில் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளா் மா.சந்திரஹாசன்.
கீழப்புலியூா் கிராமத்தில் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளா் மா.சந்திரஹாசன்.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம்

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளா் மா. சந்திரஹாசனை ஆதரிக்க கோரி முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், அதிமுக அரியலூா் மாவட்டச் செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

சிறு குடல், கீழப்புலியூா், பெருமத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் புதன்கிழமை அவா் பிரசாரம் மேற்கொண்டு பேசியது: கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் போதைப் பொருள் கலாசாரம் அதிகரித்து சட்டம்- ஒழுங்கு சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. அவா்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு நிறுத்தியது.

எனவே பெண்கள் பாதுகாப்பாக இருக்க இரட்டை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

பிரசாரத்தில், முன்னாள் அமைச்சா் ஜெயபால், பெரம்பலூா் மாவட்டச் செயலா் தமிழ்செல்வன், முன்னாள் மக்களவை உறுப்பினா் சந்திரகாசி மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனா்.

X
Dinamani
www.dinamani.com