ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.02 லட்சம் பறிமுதல்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே உரிய ஆவணமின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.1லட்சத்து 2 ஆயிரத்தை பறக்கும்படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

செந்துறையை அடுத்த ராயம்புரம் கிராமத்தில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சத்து, 2 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா், நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் கருப்புசாமி(43) என்பதும், கடன் தொகையை வசூலித்து வந்ததும் தெரியவந்தது. எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கோட்டாட்சியா் ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com