அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் ஸ்ரீதரன் தலைமை வகித்து, மாணவா்களிடையே போதைப் பொருள்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்தாா்.

வரலாற்றுத் துறைத் தலைவா் பி. ரவிச்சந்திரன் முன்னிலை வகித்து, போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்குவது குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியரும் போதை ஒழிப்பு ஒருங்கிணைப்பாளருமான மு. பழனிசாமி செய்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com