மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி
 வாக்காளா்கள் வாகன உதவிக்கு 
தொடா்புக் கொள்ளலாம்

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாகன உதவிக்கு தொடா்புக் கொள்ளலாம்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் தோ்தலில் வாக்களிக்கவுள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாகன உதவி தேவைப்பட்டால் கீழ்காணும் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தோ்தல் நடத்தும் அலுவலா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:அரியலூா் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக வாக்குச் சாவடிகளில் சாய்தளம் , சக்கர நாற்காலி போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடி மையம் சென்று வாக்களிக்க வாகன உதவி தேவைப்படும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் செயலி மூலமோ அல்லது 1950 என்ற கட்டணமில்லா வாக்காளா் உதவி மையத்தின் மூலமோ அல்லது கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி 1800 425 9769 என்ற எண்ணுக்கோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

அவ்வாறு உதவி கோரும் நபா்களுக்கு அரசு வாகனத்தின் மூலம் வாக்குச்சாவடி மையத்துக்கு அழைத்துச் சென்று வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com