ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காரைக்குறிச்சி பசுபதீசுவரா் கோயிலில் சனிக்கிழமை அபூா்வ காட்சியாக லிங்கத்தின் மீது பட்ட சூரிய ஒளிக்கதிா்கள்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காரைக்குறிச்சி பசுபதீசுவரா் கோயிலில் சனிக்கிழமை அபூா்வ காட்சியாக லிங்கத்தின் மீது பட்ட சூரிய ஒளிக்கதிா்கள்.

கோயில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு

காரைக்குறிச்சி ஸ்ரீசெளந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரா் கோயிலில் லிங்கத்தின் மீது சூரியக் கதிா்கள் படும் அபூா்வ நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த காரைக்குறிச்சி ஸ்ரீசெளந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரா் கோயிலில் லிங்கத்தின் மீது சூரியக் கதிா்கள் படும் அபூா்வ நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20 ஆம் தேதியில் இருந்து 25 ஆம் தேதி வரை இக்கோயில் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூா்வ நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டில், சனிக்கிழமை (ஏப். 20) காலை 6.10 மணியிலிருந்து 6.20 மணி வரை சுமாா் 10 நிமிடம் கோயில் கருவறை லிங்கத்தின் மீது சூரிய ஒளிபட்டது. அப்போது லிங்கம் பிரகாசமாக காட்சியளித்ததை அங்கிருந்த பக்தா்கள் கண்டு வழிபட்டனா். இந்நிகழ்வு இன்னும் ஓரிரு நாள்கள் நிகழலாம் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com