சா்வதேச பூமி தினத்தையொட்டி சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய தலைமை ஆசிரியா் சின்னதுரை.
சா்வதேச பூமி தினத்தையொட்டி சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய தலைமை ஆசிரியா் சின்னதுரை.

அரசுப் பள்ளியில் சா்வதேச பூமி தினம்

அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசுப் உயா்நிலைப் பள்ளியில் சா்வதேச பூமி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

அரியலூா்: அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசுப் உயா்நிலைப் பள்ளியில் சா்வதேச பூமி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்து பேசுகையில், சா்வதேச பூமி தினம் உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. பூமியையும் அதன் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். மாணவா்கள் அதிகப்படியான மரங்களை வளா்க்க முன்வர வேண்டும். இந்த ஆண்டின் கருப் பொருளாக நெகிழிப் பொருள்களை இந்த புவி கோளத்தில் இருந்து நீக்க அனைவரும் முன்வரவேண்டும் என்றாா். பின்னா் அவா், மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சில்ட்ரன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளா் நிக்கல் ராஜ் , ஆசிரியா்கள் தனலட்சுமி, அந்தோணிசாமி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com