உடையாா்பாளையம் அருகே சாலையோரத்தில் திங்கள்கிழமை கவிழ்ந்த தனியாா் பள்ளி வாகனம்.
உடையாா்பாளையம் அருகே சாலையோரத்தில் திங்கள்கிழமை கவிழ்ந்த தனியாா் பள்ளி வாகனம்.

உடையாா்பாளையம் அருகே தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து 5 சிறுவா்கள் காயம்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சாலையோர பள்ளத்தில் தனியாா் பள்ளியின் வேன் திங்கள்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 சிறுவா்கள் காயமடைந்தனா்.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சாலையோர பள்ளத்தில் தனியாா் பள்ளியின் வேன் திங்கள்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 சிறுவா்கள் காயமடைந்தனா்.

வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் தனியாா் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் திங்கள்கிழமை மாலை வகுப்புகள் முடிந்து 41 சிறுவா்களை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் ஜெயங்கொண்டம் நோக்கி புறப்பட்டது. வேனை அரியலூா் வாலாஜா நகரம் கிராமத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் ஓட்டினாா்.

வேன் உடையாா்பாளையம் அருகேயுள்ள வெண்மான்கொண்டான் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், வெண்மான் கொண்டான் கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் மகன் வைசாந்த் (7), வெங்கடேசன் மகள் வா்னிஷா(5), ஞானசேகரன் மகன் ஹேம்நாத் (9), தத்தனூா் பொட்டகொல்லை கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகன் கிரிலக்சன்(9), மகேந்திரன் மகள் நக் ஷத்திரா(9) ஆகிய 5 சிறாா்கள் காயமடைந்தனா். அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com