அரியலூரில் பணிகளை புறக்கணித்து வழக்குரைஞா்கள் போராட்டம்

வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை செவ்வாய்க்கிழமை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை செவ்வாய்க்கிழமை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செந்துறையை அடுத்த சிறுகடம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன் (37), செந்துறை நீதிமன்ற வழக்குரைஞா். கடந்த 19 ஆம் தேதி இரவு இவரது வீட்டின் முன் இளைஞா்கள் சிலா் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு பந்தயத்தில் ஈடுபட தயாராகினா். இதை பிரபாகரன் தடுத்ததால் ஆத்திரமடைந்த அவா்கள் பிரபாகரனை தாக்கினா். மேலும், இதுதொடா்பாக காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்கச் சென்றபோதும், வழிமறித்துத் தாக்கினா்.

இதைக் கண்டித்தும், தாக்கியோரைக் கைது செய்ய வலியுறுத்தியும், அரியலூா், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை பணிகளைப் புறக்கணித்தனா்.

மேலும், அரியலூரில் நடைபெற்ற வழக்குரைஞா் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தாக்கிய நபா்களை கைது செய்ய வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு அச்சங்க மாவட்டத் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா். சங்க துணைத் தலைவா் கதிரவன், செயலா் முத்துக்குமரன், பொருளாளா் கொளஞ்சியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com