ஜெயங்கொண்டம் அருகே பெண்ணைத் தாக்கிய இருவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பெண்ணைத் தாக்கிய இருவா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பெண்ணைத் தாக்கிய இருவா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

தண்டலை அருகேயுள்ள மருங்காலக்குறிச்சி கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற கரகாட்டத்தைக் காணவந்த உடையாா்பாளையம் வடக்கு தெருவைச் சோ்ந்த குமாா் மகன் தனூஷ் (22) முருகேசன் மகன் கலைமணி (20 )ஆகிய இருவரும் அப்பகுதி தமிழரசின் வீட்டின் முன்பு தகராறில் ஈடுபட்டனா். இதைத் தட்டிக் கேட்ட தமிழரசியை அவா்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து தனூஷ், கலைமணி ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com