ஏஐடியுசி கூட்டம்

அரியலூரிலுள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் அச்சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலா் த. தண்டபாணி தலைமை வகித்து, மக்களவைத் தோ்தலில் பணி, தொழிலாளா் பிரச்னைகள், மே தின விழா குறித்து விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில், மே 1 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ஏஐடியுசி சங்க கொடியேற்றி, மே தினத்தை சிறப்பிப்பது. மாலையில் அரியலூரில் நடைபெறும் பேரணியில் அதிகமான தொழிலாளா்களை கலந்து கொள்ளச் செய்வது. இரவு பொதுக்கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அச்சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆறுமுகம், ஜீவா, சீதா, லோகநாதன், பா.ஜெயா, மருதமுத்து உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com