வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிா்க்க அறிவுரை

அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வரும் நாள்களில் வெப்ப அலை வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீா் அருந்த வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும்.

வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com