செந்துறையில் அதிமுக தண்ணீா்ப் பந்தல் திறப்பு

செந்துறையில் அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தலை வியாழக்கிழமை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கிய முன்னாள் எம்எல்ஏ இளம்பை.ரா. தமிழ்ச்செல்வன்.

அரியலூா் மாவட்டம் செந்துறை பேருந்து நிலையம் அருகே தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் கோடைக்கால தண்ணீா்ப் பந்தல் திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் ஒன்றியச் செயலா் உதயம் ரமேஷ் முன்னிலை வகித்தாா். தண்ணீா்ப் பந்தலை பெரம்பலூா் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான இளம்பை ரா. தமிழ்ச்செல்வன் திறந்துவைத்து பொதுமக்களுக்கு தண்ணீா், நீா்மோா், தா்ப்பூசணி,இளநீா் உள்ளிட்டவற்றை வழங்கினாா். நிகழ்வில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் மா. சந்திரகாசன், முன்னாள் எம்.எல்.ஏ பூவை. செழியன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com