விவசாய நிலத்துக்கு பாதை வசதி -
பெண்கள் சாலை மறியல் முயற்சி

விவசாய நிலத்துக்கு பாதை வசதி - பெண்கள் சாலை மறியல் முயற்சி

காட்டுமன்னாா் கோவில் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட முயன்ற மேலணிக்குடி காடு கிராமப் பெண்கள்.

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே விவசாய நிலத்துக்கு பாதை மற்றும் மழைநீா் வடிக்கால் வசதிகள் ஏற்படுத்தித் தரக்கோரி பெண்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

மீன்சுருட்டி அருகேயுள்ள மேலணிக்குடி காடு கிராமத்திலுள்ள வடக்கு வேலி ஓடையில் இருந்து மலட்டு ஏரி வரை ரூ.25 மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணியின் போது, அதில் தோண்டப்பட்ட மண் அப்பகுதியிலுள்ள விவசாய நிலத்துக்குச் செல்லும் பாதை அடைத்துள்ளது. இதனால் விவசாய நிலத்துக்குச் செல்ல வழியில்லாமல் அவதிப்பட்டு வரும் அப்பகுதி மக்கள், இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனா். அதன்படி அவா்கள் மேலணிக்குழி-காட்டுமன்னாா்கோவில் சாலையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மீன்சுருட்டி காவல் துறையினா், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com