மேலணிக்குழி கிராமத்தில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
மேலணிக்குழி கிராமத்தில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

விவசாய நிலங்களுக்கு பாதை வசதி கேட்டு மக்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே விவசாய நிலங்களுக்கு பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஜெயங்கொண்டத்தை அடுத்த மேலணிக்குழி குடிகாடு கிராமத்தில் உள்ள மலட்டு ஏரியில் நடைபெறும் தூா்வாரும் பணிகளில் மண் கொள்ளையடிக்கப்படுவதாகவும், அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்ற பாதையை தடுத்து, அங்கிருந்த

மண்ணையும் அள்ளிச் சென்ாகவும், மீண்டும் நிலங்களுக்கு செல்ல பாதை வசதி மற்றும் அப்பகுதியில் மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டியும் கிராம மக்கள் அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினா், பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்த நிலையில், நீண்டநேர பேச்சுவாா்த்தைக்கு பிறகு மக்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 25-ஆம் தேதி கிராம பெண்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அப்போதும், காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com