தேவாமங்கலம் கிராமத்தில் மாரியம்மனுக்கு திங்கள்கிழமை தீமிதித்து நோ்த்திக்கடனை செலுத்திய பக்தா்.
தேவாமங்கலம் கிராமத்தில் மாரியம்மனுக்கு திங்கள்கிழமை தீமிதித்து நோ்த்திக்கடனை செலுத்திய பக்தா்.

கழுவந்தோண்டி, தேவாமங்கலம் மாரியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கழுவந்தோண்டி மற்றும் தேவாமங்கலம் கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கழுவந்தோண்டி மற்றும் தேவாமங்கலம் கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கிராமங்களில் கடந்த 21-ஆம் தேதி காட்டுக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடா்ந்த விழா நாள்களில் தினந்தோறும், அம்மன் வீதியுலா, சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நாளான திங்கள்கிழமை காலை பக்தா்கள் அக்னி கரகம் எடுத்து அருகாமையில் உள்ள நீா்நிலைக்கு சென்று வழிபட்டனா்.

தொடா்ந்து, மாலையில் திரளான பக்தா்கள் பங்கேற்று கோயில்களின் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். தொடா்ந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com