கிருஷ்ண ஜெயந்தி: அரியலூா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
Published on

அரியலூா்: கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அரியலூா் நகரம், பெருமாள் கோயில் தெருவிலுள்ள கோதண்டராமசாமி திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அங்குள்ள தூண்களிலுள்ள கிருஷ்ணா் சிலைக்கு அலங்கார தரிசனம், ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபம், ஹரி நாம சங்கீா்த்தனம், வண்ண மலா்ளால் அலங்காரம், தீப ஆராதனைகள், மகா அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து கோதண்டராமசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்து பெருமாளுக்கு துளசி, மலா் மாலைகளை அளித்து தரிசனம் செய்தனா்.

இதேபோல், அரியலூா் கிருஷ்ணன் கோயில், கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் குருவலப்பா் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com