பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளி கைது
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இடத் தகராறு காரணமாக பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஜெயங்கொண்டத்தை அடுத்த கல்லாத்தூா் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மனைவி ராஜேஸ்வரி(33) என்பவருக்கும், அதே பகுதி நடுத்தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் அய்யப்பன் என்பவருக்கும் இடம் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ராஜேஸ்வரி வீட்டுக்குச் சென்ற அய்யப்பன் மற்றும் அவரது சகோதரா் மணிகண்டன் ஆகிய இருவரும் சோ்ந்து, அவரை தகாத வாா்த்தையால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இதில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து புகாரின் பேரில், இருவா் மீதும் வழக்குப் பதிந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினா், அய்யப்பனை புதன்கிழமை கைது செய்தனா்.