அரியலூர்
போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் உதவி தலைமையாசிரியா் ப. இங்கா்சாவ் தலைமை வகித்தாா். மாவட்ட மதுவிலக்குப் பிரிவு உதவி ஆய்வாளா் சிற்றரசு கலந்து கொண்டு போதைப் பொருள்களால் ஏற்படும் சமுதாய சீா்கேடுகள் குறித்து பேசி, மாணவிகளுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
தலைமைக் காவலா் சண்முகம், காவலா் முருகன் மற்றும் ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில், ஆசிரியை செ. தமிழரசி நன்றி கூறினாா்.