எம்.ஆா் கல்லூரியில் கருத்தரங்கு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்துள்ள தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சாா்பில் ஒரு நாள் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்துள்ள தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சாா்பில் ஒரு நாள் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.அக்கல்லூரி தாளாளா் எம்.ஆா்.ரகுநாதன் தலைமை வகித்து , செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் யுகம் குறித்துப் பேசினாா். கல்லூரி இயக்குநா் ராஜாமாணிக்கம், கல்லூரி முதல்வா் ப.சங்கீதா ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா்.கும்பகோணம் மாஸ் கல்லூரி கணினித் துறை பேராசிரியா் க.சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில்,இயந்திரக் கற்றலின் முக்கிய நோக்கம், இயந்திரங்கள் தரவுகளிலிருந்து வடிவங்கள் மற்றும் விதிகளைக் கற்றுக் கொள்வது, இதனால் அவை முடிவுகளை எடுக்கவும் புதிய தரவுகளில் செயல்படவும் முடியும். அதாவது அவை முடிவுகளை எடுப்பது, தரவை பகுப்பாய்வு செய்தல் மற்றும் சிக்கல்களுக்கு தீா்வு காண்பதாகும் என்று பல கருத்துகளைக் கூறினாா். முன்னதாக கணினி துறைத் தலைவா் எஸ்.பாலமுருகன் வரவேற்றாா். முடிவில் பேராசிரியா் க.அபிராமி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை துறை பேராசிரியா்கள் மற்றும் பேராசிரியைகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com