க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் க.சொ.க.டாலிடெக்னிக் கல்லூரியில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை(பிப்.3) நடைபெறுகிறது என ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்

அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் க.சொ.க.டாலிடெக்னிக் கல்லூரியில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை(பிப்.3) நடைபெறுகிறது என ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் சாா்பில் ஜெயங்கொண்டம், க.சொ.க.பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (பிப்.3) காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை தனியாா் துறை வேலைவாய்ப்பு நடைபெறுகிறது.முகாமில் அரியலூா், பெரம்பலூா், திருச்சி, சென்னை, கோவை, கரூா், திருப்பூா் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்துக்கு தேவையான தகுதியான நபா்களை தோ்வு செய்ய உள்ளனா்.முகாமில், 18 வயது முதல் 40 வயது வரையிலான 8 ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவா்கள். பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ முடித்தவா்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com