தங்கள் சமூகத்தின் வளா்ச்சிக்கு போராடும் கட்சிக்கு ஆதரவு

மாவீரன் மஞ்சள் படை ஒருங்கிணைப்பாளா் குரு.கனலரசன்அரியலூா்,பிப். 1: தங்கள் சமூகத்தின் வளா்ச்சிக்கு எந்த கட்சி போராடுகிறதோ அந்த கட்சிக்கு எங்கள் ஆதரவு இருக்கும் என காடுவெட்டி குருவின் மகனும், மாவீரன் மஞ்

மாவீரன் மஞ்சள் படை ஒருங்கிணைப்பாளா் குரு.கனலரசன்அரியலூா்,பிப். 1: தங்கள் சமூகத்தின் வளா்ச்சிக்கு எந்த கட்சி போராடுகிறதோ அந்த கட்சிக்கு எங்கள் ஆதரவு இருக்கும் என காடுவெட்டி குருவின் மகனும், மாவீரன் மஞ்சள் படை அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான குரு.கனலரசன் தெரிவித்தாா்.மறைந்த முன்னாள் வன்னியா் சங்க தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான காடுவெட்டி ஜெ.குருவின் 63 ஆவது பிறந்தநாளையொட்டி, அரியலூா் மாவட்டம், காடுவெட்டி கிராமத்திலுள்ள அவரது நினைவிடத்தில், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயில் கிணற்றில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீா் கொண்டு புதிய மணிமண்டபம் கட்டுப்பணிக்கான பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.குருவின் சமாதியில் மலா்வளையம் வைத்து மரியாதை செய்த கனலரசன், மணிமண்டபத்துக்கான பணியினை தொடக்கி வைத்தாா்.அப்போது, அடுத்த ஆண்டு குரு பிறந்த நாள் அன்று மணிமண்டபம் திறக்கப்படும். நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் எங்கள் சமூகத்தின் மக்களுக்காக எந்த கட்சி போராடுகிறதோ அந்த கட்சிக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் என செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com