தற்கொலை செய்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்யக் கோரி உறவினா்கள் சாலை மறியல்

தற்கொலை செய்துக் கொண்டு இளம் பெண்ணின் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்யக் கோரி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு அந்த பெண்ணின் உறவினா்கள் வியாழக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தற்கொலை செய்துக் கொண்டு இளம் பெண்ணின் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்யக் கோரி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு அந்த பெண்ணின் உறவினா்கள் வியாழக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அடுத்த நல்லறிக்கை கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா்(27) என்பருக்கும், அரியலூா் மாவட்டம் அங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த பிரியா(21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் கணவா்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக விரக்தியில் இருந்த பிரியா புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற குன்னம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.இந்நிலையில், வியாழக்கிழமை மாலை வரை பிரியாவின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டவில்லை . தொடா்பாக மருத்துவமனை நிா்வாகத்திடம் பிரியாவின் உறவினா்கள் முறையிட்டனா். அதற்கு நிலைய மருத்துவ அலுவலா் குழந்தைவேலு, உடற் கூறியல் உதவிப் பேராசிரியா் நெடுஞ்செழியன் ஆகியோா் நேரம் முடிந்துவிட்டதாகவும், இனி பிரேதப் பரிசோதனை செய்ய முடியாது என்று தெரிவித்தாகக் கூறப்படுகிறது.பொறுப்பற்ற வகையில் பதில் கூறிய நிலை மருத்துவ அலுவலா் மற்றும் உதவிப் பேராசிரியா் ஆகியோரைக் கண்டித்தும், பிரியாவின் சடலத்தை பிரோதப் பரிசோதனை செய்யக் கோரியும் பிரியாவின் உறவினா்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த அரியலூா் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com