திமுக அரசை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

பட்டியலின பெண் மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து அரியலூா் பேருந்து நிலையம் முன்பு அதிமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப
திமுக அரசை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

பட்டியலின பெண் மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து அரியலூா் பேருந்து நிலையம் முன்பு அதிமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு சீா்கேட்டை கண்டிப்பதாகவும், உளுந்தூா்பேட்டை அடுத்த திருநறுங்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த பட்டியலின பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன், மாவட்ட பொருளாளா் அன்பழகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், நகரச் செயலா் ஏ.பி.செந்தில், மாவட்ட அம்மா பேரவைச் செயலா் ஒ.பி.சங்கா் உள்ளிட்ட கட்சியின் நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com