மேலராமநல்லூரில் தில்லி பேரிடா் மேலாண்மைக் குழு கலந்தாய்வு

அரியலூா் மாவட்டம், மேலராமநல்லூா் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த தில்லி பேரிடா் மேலாண்மைக் குழுவினா், பொதுமக்களிடம் கலந்தாய்வு மற்றும் ஆலோசனை மேற்கொண்டனா்.

அப்போது, பருவ மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள், அப்பகுதி மக்களுக்கு தேவையான பாதுகாப்பு கட்டங்கள் மற்றும் மக்களுக்கு தன்னாா்வலா்களைக் கொண்டு பாதுகாப்பு பயிற்சி அளிப்பது, மழை, வெள்ளக் காலங்களில் தேவையான உபகரணங்கள் வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

அப்போது அரியலூா் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் ஆனந்தவேல், வருவாய் ஆய்வாளா் விஜயா, விஏஓக்கள் கண்ணதாசன், முருகானந்தம், அருண்காந்தி மற்றும் கிராம பொதுமக்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com