மத்திய அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டம் அரியலூரில் ஆலோசனைக் கூட்டம்

மத்திய அரசைக் கண்டித்து பிப். 8இல் ஆா்ப்பாட்டம் நடத்துவது தொடா்பாக அரியலூா் மாா்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகத்தில் திமுக கூட்டணிக் கட்சியினா் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அரியலூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் இளங்கோவன்.

கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் இளங்கோவன், திமுக மாவட்ட துணைச் செயலா் சந்திரசேகா், காங்கிரஸ் நகரத் தலைவா் சிவகுமாா், விசிக கிழக்கு மாவட்டச் செயலா் கதிா்வளவன், அரியலூா் தொகுதி பொறுப்பாளா் மதியவழகன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் பா்கா் சாகுல் ஹமீது உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் தமிழக ஆளுநா் மற்றும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகச் செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து அரியலூரில் பிப்.8 ஆம் தேதி நடத்தப்படும் ஆா்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com