சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

 அரியலூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

 அரியலூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

பிரதோஷத்தையொட்டி அரியலூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியப்பொடி மாவுப்பொடி, மஞ்சள், சந்தனம், பால், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடா்ந்து வைத்திநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் அரியலூா், கீழப்பழூா், திருமானூா், செந்துறை, தா. பழூா், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com