வள்ளலாா் கல்வி நிலையத்தில் இலவச பல் மருத்துவ முகாம்

அரியலூா் அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில் இலவச பல் மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அரியலூா் அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில் இலவச பல் மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் தங்கவேல் தலைமை வகித்து, பல் சுகாதாரம், அதனை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தாா். முகாமில் பல் மருத்துவா்கள் கலந்து கொண்டு பள்ளியில் பயிலும் 250 மாணவ, மாணவிகளுக்கு பல் பரிசோனைச் செய்து, சிலருக்கு சிகிச்சை அளித்தனா்.

ஏற்பாடுகளை தென்னாற்காடு பல் மருத்துவ சங்கத் தலைவா் மலா்கொடி, முகாம் ஒருங்கிணைப்பாளா் உதயசூரியா, வேல் மொபைல் பல் மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளா் உமா, உதவியாளா்கள் மோனிகா, மனோராஜ் ஆகியோா் செய்திருந்தனா். முன்னதாக கல்வி நிலையச் செயலா் புகழேந்தி வரவேற்றாா். முடிவில் தலைமை ஆசிரியா் செளந்தரராஜன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com