அரியலூரில் 513 மகளிா் குழுக்களுக்கு ரூ. 38 கோடி கடனுதவி -அமைச்சா் வழங்கினாா்

 அரியலூா் மாவட்டத்தில் 513 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 7,555 பயனாளிகளுக்கு ரூ.38.05 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

 அரியலூா் மாவட்டத்தில் 513 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 7,555 பயனாளிகளுக்கு ரூ.38.05 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனிதா நினைவு கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், 513  மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த  7,555  பயனாளிகளுக்கு ரூ.38.05  கோடி மதிப்பிலான வங்கி நேரடி கடன்,  ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு சுழல் நிதி, பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.40  லட்சம் மதிப்பிலான மதி (மகளிா் திட்டம்) எக்ஸ்பிரஸ் மின்கல வாகனங்களை வழங்கினாா்.

அப்போது அமைச்சா் பேசுகையில்,  அரியலூா் மாவட்டத்தில் ஊரக பகுதியில்  6,032  மகளிா் சுய உதவிக் குழுக்களும்,  நகரப் பகுதியில்  703  மகளிா் சுய உதவிக் குழுக்களும் என மொத்தம்  6,735  மகளிா் சுய உதவிக் குழுக்கள் 79,127  சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. 

அரியலூா் மாவட்டத்தில்  2023-24 ஆம் ஆண்டு ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி நேரடி கடன்  7,933  சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 456  கோடி இலக்கீடு நிா்ணயம் செய்யப்பட்டதில் தற்போது வரை  6,370  சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 391.54  கோடி இலக்கீடு அடைய பெற்றுள்ளது என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு. சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ச. கலைவாணி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சௌ. கங்காதரணி, மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன், அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com