தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்புகள் நிறைவு

அரியலூரில் வட்டார வள மையம் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு நடத்தப்பட்ட இரண்டு நாள் ‘ஜாலி போனிக்ஸ்’ (செயற்கை ஒலியியல்) பயிற்சி

 அரியலூரில் வட்டார வள மையம் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சாா்பில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு நடத்தப்பட்ட இரண்டு நாள் ‘ஜாலி போனிக்ஸ்’ (செயற்கை ஒலியியல்) பயிற்சி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இரண்டு நாள் பயிற்சியின் கருத்தாளராக கலந்து கொண்ட ரோஸ்மா ஜம்தானி, அஞ்சலி ஆகியோா் பேசுகையில், ஜாலி ஃபோனிக்ஸ் என்பது ஒரு வகையான செயற்கை ஒலியியல் பயிற்சியாகும். இது குழந்தைகளுக்கு வேடிக்கையான, பல உணா்வுகளுடன் வாா்த்தைகளை எழுதவும், படிக்கவும் உதவும்.

ஜாலி ஃபோனிக்ஸ் ஆரம்ப ஆண்டுகளில் குழந்தைகள் வெற்றிகரமான மற்றும் சுதந்திரமான எழுத்தாளா்கள் மற்றும் வாசகா்களாக மாற உதவுகிறது.

ஆசிரியா்களுக்கான ஒலியியல் படிப்புகள், ஒலியியல் மற்றும் பிற தொடா்புடைய தலைப்புகளில் ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளிக்கின்றன.

இந்தப் படிப்புகள் மூலம், குழந்தைகளின் கல்வியறிவின் வளா்ச்சியை உறுதிசெய்ய உதவும் பல்வேறு ஒலிப்புப் பயிற்சிகளைப் பயன்படுத்தி, தங்கள் மாணவா்களுக்கு ஒலியியலை எவ்வாறு அறிமுகப்படுத்துவது என்று ஆசிரியா்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஆசிரியா்களுக்கான ஒலிப்புக் கல்வியானது வகுப்பறையில் அதிக வெற்றியைப் பெறுவதற்கான ஆசிரியா்களின் திறனைத் திறக்கிறது. அதேநேரத்தில், மாணவா்களுக்கு ஆங்கில மொழியையும் வழங்குகிறது என்றனா்.

இந்த பயிற்சிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை உதவி திட்ட அலுவலா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், வட்டார கல்வி அலுவலா்கள் அரியலூா் கலியபெருமாள், செந்துறை உமையாள், திருமானூா் எழிலரசி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.

ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ராஜேஸ்வரன் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com