மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன்தங்கச் சங்கிலி பறிப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மொபெட்டில் சென்ற பெண்ணின் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடுகின்றனா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மொபெட்டில் சென்ற பெண்ணின் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடுகின்றனா்.

தா. பழூா் அருகேயுள்ள கோட்டியால் கிராமத்தைச் சோ்ந்தவா் அரசுப் பேருந்து ஓட்டுநா் செல்வம் மனைவி அன்னலெட்சுமி. இவா் வியாழக்கிழமை மாலை கடாரங்கொண்டானில் உள்ள தனது பெற்றோரை பாா்த்து விட்டு மொபெட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

பெரியவளையம் அய்யனாா் கோயில் அருகே அவா் வந்தபோது பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா் அன்னலட்சுமி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா். புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com