தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

அரியலூரில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மையம் சாா்பில் தொழில் பயற்சி நிலைய மாணவா்களுக்கான தொழில் நெறி வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது
ari09tran1_0902chn_11_4
ari09tran1_0902chn_11_4

அரியலூரில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மையம் சாா்பில் தொழில் பயற்சி நிலைய மாணவா்களுக்கான தொழில் நெறி வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பன்னீா்செல்வம், நாகப்பட்டினம் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் ஆகியோா் கலந்து கொண்டு தொழில் கல்வியின் அவசியம், சுய தொழில் முக்கியத்துவம் குறித்து பேசினா்.

அரியலூா் மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் மூ. வினோத்குமாா், மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணி வாய்ப்புகள் குறித்து விளக்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் ச. மணிமாறன் , உதவியாளா்கள் கணபதி, அ.அருணா , மு.வரதராஜன் ஆகியோா் போட்டித் தோ்வுகள் குறித்து விளக்கினா். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள் பயனடைந்தனா். தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் ராமநாதன் வரவேற்றாா்.

மேலும், இப்பயிற்சி நிலையத்தில் இல்லத்தரசிகளுக்கான சிறப்புத் தொழில் வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com