உணவு ஒவ்வாமையால் சிறுமி உயிரிழப்பு

 அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே உணவு ஒவ்வாமையின் காரணமாக 12 வயது சிறுமி உயிரிழந்தாா்.

 அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே உணவு ஒவ்வாமையின் காரணமாக 12 வயது சிறுமி உயிரிழந்தாா்.

தா.பழூரை அடுத்த கூழாட்டுக்குப்பம் தெற்குத் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ்-அன்பரசி தம்பதிக்கு துவாரகா (15), இலக்கியா (12) என 2 பெண் குழந்தைகள். இந்நிலையில், சனிக்கிழமை இரவு அனைவரும் வீட்டில் உணவு சாப்பிட்டனா். இதில் உணவு செரிமானம் ஆகாததால் அனைவருக்கும் வாந்தி ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறுமி இலக்கியா சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். முதல்நாளான வெள்ளிக்கிழமை வீட்டில் சமைத்த கோழிக்கறி உணவை சனிக்கிழமை இரவு அனைவரும் சாப்பிட்டதால், உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாக தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com