கிராம கோயில்களில் கும்பாபிஷேகம்

கோடாலிகருப்பூா், அங்கனூா், ஆண்டிமடம் ஆகிய கிராமங்களிலுள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், கோடாலிகருப்பூா், அங்கனூா், ஆண்டிமடம் ஆகிய கிராமங்களிலுள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோடாலி கருப்பூா் ராமநாராயண பெருமாள், அங்கனூா் வன்னி முனியப்பா, ஆண்டிமடம் வீரணாா் கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த இரு நாள்களாக கோயில்களுக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த யாகசாலை பந்தலில் நான்கு கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நடைபெற்று மேற்கண்ட கோயில்களின் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com