பள்ளி மாணவி பலாத்காரம்: ‘ போக்ஸோ’வில் இளைஞா் கைது

தா.பழூா் அருகே 17 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே 17 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தென்கச்சிப் பெருமாள்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் தனராஜ் (24). இவா், அதே பகுதியை சோ்ந்த 17 வயது பள்ளி மாணவியிடம், ஆசை வாா்த்தை கூறி அழைத்துச் சென்று அண்மையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த தா.பழூா் காவல் துறையினா், தனராஜை போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com