அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில், மனநலன் பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில், மனநலன் பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பெரியவளையம், மேலத்தெருவைச் சோ்ந்த சாமிக்கண்ணு மனைவி காவேரி (75). இவா் சற்று மனநலன் பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது. இவா் அங்குள்ள திருச்சி-சிதம்பரம் சாலையை கடந்தபோது, அந்த வழியாக வந்த காட்டுமன்னாா்குடிக்குச் சென்ற அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினா், பெண்ணின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com